அனுராதபுர மாவட்டத்தில் கஹடகஸ்திகிலிய நகரின் கடைத்தொகுதி நடுவே ஒரு சிறு பாடசாலையாக சிங்கள, தமிழ், முஸ்லிம் யாவரும் ஒன்றாக கல்வி கற்க கூடிய முறையில் பாடசாலை அமைந்து காணப்பட்டது. பின்னர் யூனியன் பாடசாலையாக கோன்வெவ வீதியில் தற்போது மத்திய கல்லூரியாக காணப்படும் இடத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் தமிழ் மொழிக்கு என தனியான பாடசாலையாக வேறாக்கப்பட்டு தற்போது காணப்படும் இப்பாடசாலை 1948ல் ஆரம்பிக்கப்பட்டது. இது கைநாட்டாக வீதியில் நகரில் இருந்து தெற்கே 750 மீற்றர் தூரத்தில் அழகாக அமைந்து காட்சி தருகின்றது. இதன் ஆரம்ப கர்த்தாவாக எஸ்.கந்தசாமி அதிபர் பாடசாலையை ஒழுங்காக நிர்வகித்து பாடசாலையின் முன்னேற்றத்திற்கு அரும் பாடுபட்டார். அன்றிலிருந்து படிப்படியாக சிறு வளர்ச்சியுடன் வீறு நடை போட்டுக் கொண்டிருக்கின்றது.
2013 ஆம் ஆண்டு ஆயிரம் பாடசாலை அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டமையால் ஆரம்ப பிரிவுப் பகுதியை வேறாக்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்வாங்கப்பட்டது. ஆகவே 1-5 வரையான வகுப்புகள் அல் ஹ{தா ஆரம்ப பாடசாலைக்கு மாற்றப்பட்டது. தற்போது 6-13 வகுப்பு வரை 592 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
2016 முதல் இப்பாடசாலை 1 யுடீ பாடசாலையாக உயர்த்தப்பட்டு கலை, வர்த்தகம், விஞ்ஞானம், பொறியியல், தொழிநுட்ப ஆகிய பிரிவுகள் ஒழுங்காக நடாத்தப்பட்டு வருகின்றது. அப்பாடங்களுக்கான சிறந்த ஆசிரியர் குழாம் இங்கு காணப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் உயர்தர வகுப்புகளில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்களின் தொகையும் அதிகரிப்பதோடு சாதாரணதர வகுப்புகளில் சித்தி வீதம் 100 வீதமாக அமைந்து காணப்படுகின்றது. மேலும் 2020 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் எமது பாடசாலை மாகாணத்தில் தொழிநட்பப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது என்பது முக்கிய அம்சமாகும்.